உணவுக்காக அயலவர்களை நம்பியிருக்கும் குடும்பங்கள்
நாட்டில் உள்ள 4 குடும்பங்களில் 1 குடும்பம் அயலவர்களிடம் இருந்து பெறப்படும் உணவையே நம்பியிருப்பதாக குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழு வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்ட போதே, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் 3 குடும்பங்களில் 1 குடும்பம் சமையல் செய்வதையும் குறைத்துள்ளது. அதேநேரம், அவற்றின் நுகர்வு குறைவாக உள்ளது. உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டின் மூன்றாம்
காலாண்டில் 24 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழு தெரிவித்துள்ளது.