நீதிமன்றத்தை நாடவுள்ளார் நடிகை தமிதா!

நீதிமன்றத்தை நாடவுள்ளார் நடிகை தமிதா!

இரத்தினபுரி வேட்புமனு பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு அருகில் இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தேர்தலில் போட்டியிட தன்னை முன்னிறுத்திய நபரே தமக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஹேஷா விதான சகோதரர் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார், சகோதரி தமிதா, நீங்கள் ஏன் இரத்தினபுரியில் போட்டியிடக் கூடாது.

நான் எங்கு கேட்பது என்று யோசிக்கவில்லை என்றேன். அதற்கு இல்லை அக்கா, நான் உங்களை இங்கு போடுகிறேன், இங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என்றார்.

நீங்கள் முன்மொழிந்தால் நான் வருகிறேன் என்றேன்.

அப்படித்தான் எனது பெயர் வந்தது. அதனை இல்லை என்று கூறினால் என்னிடம் ஆதாரம் உள்ளது.

நேற்று எனது பெயர் விடுபட்டதாக செய்தி கிடைத்தது. என் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று. நான் ஆதாரத்துடன் பேசுகிறேன்.

இந்த ஆதாரங்கள் அனைத்தும் ஊடகங்கள் முன் காட்ட தயாராக உள்ளன.

ஹேஷா ஏன் இவ்வளவு தாழ்ந்த இடத்தில் விழுந்தார் என்று தெரியவில்லை.

எனக்கு பரிந்துரைத்த அதே நபர் என் காலை இழுக்க ஆரம்பித்தார்.

நான் நீதிமன்றம் செல்வேன். எனது அடிப்படை உரிமைகள் தெளிவாக மீறப்பட்டுள்ளன”. என்றார்.

இதேவேளை, இன்று காலை இடம்பெற்ற மற்றுமொரு ஊடகவியலாளர் சந்திப்பில் ஹேஷா விதானகே, தமிதா அபேரத்ன தொடர்பில் இவ்வாறு பதிலளித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருந்தன.

ஆனால் 14 பேருக்குத்தான் கொடுக்க முடியும்.

தமிதா அபேரத்ன எமது கட்சிக்கு பெரும் பலத்தை வழங்கிய கலைஞர்.

ஆனால் இரத்தினபுரி மாவட்டத்தில் அரசியல் தலைவர் ஒருவர் தேவைப்படுவதால் தேசிய மட்டத்தில் எமக்கு எவ்வளவு பலம் கொடுத்தாலும் இந்த மாவட்டத்திற்கு வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களை நிறுத்த மாட்டோம் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

எனவே இரத்தினபுரியில் பிறந்து இரத்தினபுரி மக்களுடன் இணைந்த குழுவாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )