இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளால் நிதிக்கொள்கை திசையில் நிலையற்ற தன்மை

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளால் நிதிக்கொள்கை திசையில் நிலையற்ற தன்மை

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் நிதிக்கொள்கை திசையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி இருப்பதாக சர்வதேச தரப்படுத்தல்
நிறுவகமான பிட்ச் ரேட்டிங் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக வெளிநாட்டு நாணய கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்ட இணக்கப்பாடு என்பவற்றில் தாமதம் ஏற்படலாம் என்றும்
பிட்ச் ரேட்டிங் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பான தெளிவை, நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் ஊடாக
பெற்றுக் கொள்ள முடியும்.

அண்மையில் சீனா மற்றும் வெளிநாட்டுக் கடன் வழங்குநர்களுடனான இணக்கப்பாடு, இலங்கையின் முன்னேற்றத்தைக் காண்பிக்கிறது என்றும் பிட்ச் ரேட்டிங்
தெரிவித்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )