கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானம்
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பில் இன்று (6) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.
நீங்கள் அதை கேட்கவில்லை. அதேபோன்று அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோப் குழுவின் (பொது நிறுவனங்கள் பற்றி குழு) தலைவர் பதவி ஆளுங்கட்சிக்கு தேவை என்று கூறினோம்.
முதல் காலகட்டத்தில், முந்தைய அரசாங்கத்தின் விடயங்களை பரிசீலிக்க வேண்டும். அந்த அரசின் அமைச்சர் ஒருவர் கோப் குழுவின் தலைவராக வருவதை நாங்கள் விரும்பவில்லை” என்றார்.
இதேவேளை, இன்று காலை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, துறைசார் குழுவை நியமிப்பதற்கு ஜனவரி 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன் நிதிக்குழு நியமனம் தொடர்பில் இன்று பிற்பகல் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, பாதுகாப்பு அமைச்சு, நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு உள்ளிட்ட 24 அமைச்சு ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.