புதிதாக வீடு கட்டி புகும்போது பசுவை அழைத்து வாருங்கள்
நாம் புதிதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் நடத்தும்போது கன்றுடன் கூடிய பசுவைப் புதிய வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கத்தில் வைத்து இருக்கிறோம்.
புது வீட்டுக்குள் வரும் பசு அங்கு வைத்து ஒரு வாய்ப்புல் தின்று அங்கேயே அது தன் கோமியத்தை இட வேண்டும்;
அந்தக் கோமியத்தில் மஞ்சள் பொடி கலந்து அந்தப் புதுமனையின் உள்ளும் புறமும் எங்கும் தெளிக்க வேண்டும் என்பதே.
புதுமனை புகு விழாவின் முக்கிய நிகழ்வாகும்.
இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் நோய், நொடியின்றி செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.
புதுமனைப் புகுவிழா நடைபெறும் அன்று நடைபெறும் ஹோமத்தின்போது பசுவையும், கன்றையும் அழைத்து வருவார்கள்.
அப்படி கோமாதா வருவது புதுமனையில் லட்சுமி தேவியே எழுந்தருள்வது போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத்தைத் தருவதாகும்.
இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப் பலன் உண்டு.
பால் நீண்ட வாழ்வையும், தயிர் புத்ர விருத்தியையும், நெய் மோட்சத்தையும், பஞ்ச கவ்யம் ஆன்ம விருத்தியையும் தரும்.
பால் குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.
சிவனுக்கு அபிஷேகம் செய்து, அவனை அர்ச்சித்து, ஆராதித்தால் அவனது அருட்கடலில் மூழ்கித் திளைக்கும் பெரும் பேறு அடியவர்களுக்கு எளிதில் கிடைக்கும்.
சிவனுக்கு மிக விருப்பமான அபிஷேகப் பொருள் பஞ்ச கவ்வியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.