ஐக்கிய தேசிய கட்சியை ஒரு சிலர் பணய கைதியாக பயன்படுத்த முற்படுகின்றனர்
“ ஐக்கிய தேசியக் கட்சியை ஒரு சிலர் பணயக் கைதியாக பயன்படுத்த முற்படுகின்றனர். எனினும், கட்சியை அழிப்பதற்கு இடமளிக்கமுடியாது.” என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்தப்படியாக ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர் நான்தான். எனவே, ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக கட்சியை அழிக்க இடமளிக்க முடியாது. மக்களின் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்க வேண்டும்.
கட்சியை விட்டு சென்றவர்களும் மீள வரவேண்டும். ஒரு சிலருக்காக எமது கட்சியை பணயக்கைதியாக பயன்படுத்த இடமளிக்க முடியாது. இந்நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய கட்சியே ஐக்கிய தேசியக் கட்சியாகும். அக்கட்சியை பழைய நிலைமைக்கு கொண்டுவர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.