மீளாய்வு செய்த பின்னரே மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது
மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என புலனாய்வு பிரிவுகள் மீளாய்வு செய்த பின்னரே அவருக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
புலனாய்வு பிரிவு வழங்கும் சாட்சிகளின் அடிப்படையிலேயே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கிறிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ தற்போதும் அவருக்கு பாதுகாப்புக்கு 60 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த அளவு தேவையா என்ற கேள்வியும் உள்ளது. அடுத்த புலனாய்வு அறிக்கையில் குறைக்குமாறு கோரப்பட்டால் அதனையும் செய்வோம். ஏனெனில் மக்கள் பணத்தை வீணடிக்க நாம் தயாரில்லை.” என தெரிவித்துள்ளார்.