அரச அச்சகத்தின் இணையத்தளம் இன்றைய தினத்திற்குள் வழமைக்கு திரும்பும்

அரச அச்சகத்தின் இணையத்தளம் இன்றைய தினத்திற்குள் வழமைக்கு திரும்பும்

சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளமும், பொலிஸாரின் யூடியூப் சேனலும் தற்போது மீளமைக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று (02) தினத்திற்குள் இவற்றை வழமைக்கு கொண்டு வர முடியும் என அதன் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சைபர் தாக்குதல்களை எந்த தரப்பினர் நடத்தினர் என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி, பொலிஸ் சமூக வலைதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அரச அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளமும் தாக்கப்பட்டது.அரச அச்சகத்தின் இணையத்தளம் இன்று தினத்திற்குள் வழமைக்கு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )