கடத்தல்காரக் குழுக்களின் நலன்களுக்காக அரசாங்கம் செயற்படாது
மருந்துவத் துறையில் மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படும் அனைத்து அதிகாரிகளினதும் பாதுகாப்புக்காக அரசாங்கம் நிபந்தனையின்றி நிற்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கொழும்பில் தெரிவித்துள்ளார்.
கடத்தல்காரக் குழுக்களின் நலன்களுக்காக அமைச்சோ அல்லது அரசாங்கமோ செயற்படாதெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதிக இலாபமீட்டும் தொழிலாக மாறியுள்ள மருத்துவத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் பிழைகளைத் தீர்ப்பதற்கும் திருத்துவதற்கும் அனைத்து ஊழியர்களையும் ஊக்குவிக்கும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுமென கொழும்பு-02 இல் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் அவசர பரிசோதனையில் கலந்துகொண்ட அவர் தெரிவித்துள்ளார்