வெள்ளப்பெருக்கு தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வெள்ளப்பெருக்கு தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மல்வத்து ஓயா படுகையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, தந்திரிமலையிலிருந்து கீழ் பகுதிகளில் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை காரணமாக, வெங்கலச்செட்டிகுளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த  தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் இந்த நிலை குறித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )