108 கிலோ கிராம் கஞ்சாவுடன் நால்வர் கைது
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநகரைச் சேர்ந்த இருவரும், பூநகரி மற்றும் மன்னாரை சேர்ந்தவர்களாக நால்வர் நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர்களையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka