ஏப்ரலில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் திகதியை அறிவிக்கும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று(28) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் நடத்துவது தொடர்பான வரைவு சட்டமூலம் மீதான உயர் நீதிமன்றத் தீர்மானத்தை சபாநாயகர் பெற்றுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்ததன் பின்னர் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.