புதையல் தோண்டிய இருவர் கைது
வெலிகந்த, நாகஸ்தென்ன பகுதியில் உள்ள தோட்டத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் அவரது சகோதரரும் இன்று (03) கைது செய்யப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளது. புதையல் தோண்டும் போது தப்பிச் சென்ற மீதமுள்ள குழுவை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
CATEGORIES Sri Lanka