சட்டவிரோதமாக ஜீப் வாகனத்தை இறக்குமதி செய்தவர்  கைது

சட்டவிரோதமாக ஜீப் வாகனத்தை இறக்குமதி செய்தவர் கைது

சட்டவிரோதமாக லேண்ட் குரூஸர் ரக ஜீப் வாகனத்தை இறக்குமதி செய்து மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்ததற்காக வாகன தொழிலதிபர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை இலஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

குறித்த ஜீப் வாகனத்தை சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்து மோட்டார் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமாக பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் தொழிலதிபர் மொரந்துடுவயில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )