
புற்றுநோயால் வருடாந்தம் 250 சிறுவர்கள் உயிரிழப்பு
புற்றுநோயால் வருடாந்தம் 1200 சிறுவர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு திட்டத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
இவர்களில் வருடாந்தம் சுமார் 250 சிறுவர்கள் உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.