
பாணந்துறையில் பேருந்து விபத்து – நான்கு பேர் காயம் !
பாணந்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 4.00 மணியளவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்
CATEGORIES Main News