விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி: வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட பிரதமர் ஹரினி

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி: வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட பிரதமர் ஹரினி

விபத்தில் சிக்கிக் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேரில் சென்று பார்வையிட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு நேற்று இரவு சென்ற பிரதமர், இளங்குமரன்
எம்.பியின் உடல் நிலைமை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிறீபவானந்தராஜா, யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.

இளங்குமரன் எம்.பி. பயணித்த கார் நேற்று மாலை விபத்தில் சிக்கியது.

கிளிநொச்சியில் இருந்து நேற்று மாலை யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த இளங்குமரன் எம்.பியின் வாகனம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
தனங்கிளப்பு பகுதியில் எதிர்த் திசையில் நோக்கி வந்த பட்டா வாகனத்தோடு
மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் தலையில் காயமடைந்த நிலையில் இளங்குமரன் எம்.பி. யாழ். போதனா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )