மின்சாரக் கட்டணத்தை 1/3 குறைப்பதாகக் கூறிவிட்டு, ஏன் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் ?

மின்சாரக் கட்டணத்தை 1/3 குறைப்பதாகக் கூறிவிட்டு, ஏன் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கப் பார்க்கிறீர்கள் ?

ரூ. 9000 மின்சார கட்டணத்தை ரூ. 6000 ஆகவும், ரூ.3000 மின்சார கட்டணத்தை ரூ. 2000 ஆக அமையும் விதமாக மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆக குறைப்போம் என்று தேர்தல் காலத்தில் ஆளுந்தரப்பினர் தெரிவித்தனர்.

மக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததன் பிரகாரம், மின்சார கட்டணம் சராசரியாக 20% குறைக்கப்பட்டது. இது இவ்வாறு இருக்கத்தக்க விரைவில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண சூத்திரத்தை மக்கள் சார்பானதாக மாற்றியமைப்போம் என தெரிவித்திருந்தனர். எதிர்காலத்தில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிப்பை விடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறு மின்கட்டணம் மேலும் அதிகரிக்கும் போது இது புதிய முதலீடுகளுக்கும் பொதுமக்களும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)