சிறுவர்களிடையே பரவும் இன்ஃபுளுவென்சா வைரஸ்
இன்ஃபுளுவென்சா வைரஸ் தற்போது சிறுவர்களிடையே பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் சுவாசக் குழாயைப் பாதிப்பதன் காரணமாக காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, இருமல், சோர்வு போன்ற அறிகுறிகள் சிறுவர்களிடையே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிகுறிகள் சிறுவர்கள் மத்தியில் காணப்படுமாயின் முறையான மருத்துவ சிகிச்சையைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இன்ஃபுளுவென்சா வைரஸ் எளிதில் பரவும் திறன் கொண்டதால் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.