தேர்தல் சட்டத்தை மீறிய தேசிய மக்கள் சக்தி !

தேர்தல் சட்டத்தை மீறிய தேசிய மக்கள் சக்தி !

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் மஹரகம தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தில் நடைபெற்ற ‘தேசிய அகில இலங்கை தாதியர் மாநாடு’ தேர்தல் சட்டத்தை மீறியுள்ளதாக தெரிவித்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (CAFE) தேர்தல் ஆணைக்
குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளது.

மேற்படி அமைப்பு கடிதமூலம் அந்த முறைப்பாட்டை தேர்தல்
ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ளது.

அரச தாதியர்கள் இந்த மாநாட்டில் தமது உத்தியோகபூர்வ சீருடையில்
கலந்து கொண்டிருந்தமை தேர்தல் சட்டத்தை மீறும் நடவடிக்கையாகும் என கெபே (CAFE) , அமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வாறு அவர்கள் உத்தியோக பூர்வ சீருடைஅணிந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டமை பொதுச் சொத்துக்களை கட்சி அரசியலுக்காக பயன்படுத்திய சந்தர்ப்பமாகிறது என்றும் கெபே (CAFE) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

மக்களின் நிதியை செலவிட்டு வழங்கப்படும் உத்தியோகபூர்வ சீருடை அவர்களின் தொழிலுக்காக வழங்கப்படும் சிறப்புரிமை என்றும் அந்த வகையில்
அரசியல் நடவடிக்கைகளுக்காக அதனை உபயோகிப்பது நிறுவன
சட்டக் கோவை மற்றும் தேர்தல் சட்டங்களுக்கிணங்க குற்றச்செயலாகும் என்றும் அக் கடிதத்தில் கெபே (CAFE) சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் பிரஜை என்ற வகையில் எவருக்கும் தொழில் உரிமைக்காக செயற்படும் உரிமை மற்றும் எந்த அரசியல் உரிமைக்காகவும் முன்னிற்பதற்கு உரிமையுள்ளது.
எனினும் தொழிலுக்கான உத்தியோகபூர்வ சீருடையுடன் அந்த செயற்பாடுகளில் ஈடுபடுவது அரச ஊழியர்கள் என்ற வகையில் சட்டவிரோதமானதாகும்.

அதுமட்டுமன்றி தார்மீகத்துக்கு எதிரானதுமாகும் என்றும் கெபே (CAFE) அமைப்பின்
நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தாதியர்கள் அவர்களுடைய உத்தியோகபூர்வ சீருடையுடன் மேற்படி மாநாட்டில் பங்கு பற்றியுள்ளமை தொடர்பில், சுகாதார அமைச்சின் செயலாளரிடமிருந்து அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )