கெய்ரோ வர்த்தக சம்மேளன நிகழ்வில் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு
எகிப்துக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இலங்கை மற்றும் எகிப்துக்கிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக எகிப்திய வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்புடன் கெய்ரோ வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
நிகழ்வில் எகிப்திய வர்த்தக சம்மேளனத்தின் (FEDCOC) தலைவர், ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவு அமைச்சர், கெய்ரோ வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் மற்றும் FEDCOC மற்றும் கெய்ரோ வர்த்தக சம்மேளனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட எகிப்தின் முதல் மற்றும் மிகப்பெரிய வர்த்தக சம்மேளனமாகும். இரு நாடுகளுக்குமிடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கான குறிப்பாக விவசாயம், ஆடை உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க மற்றும் எரிசக்தி சுற்றுலா உள்ளிட்ட துறைகள் குறித்த ஆக்கபூர்வமான விவாதத்தை இந்நிகழ்வு ஏற்படுத்தியது.
“பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக இலங்கை வழங்கும் கவர்ச்சிகரமான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய எகிப்திய வர்த்தக சமூகத்திற்கு அன்பான அழைப்பை நான் விடுத்தேன். நமது எதிர்கால ஒத்துழைப்புகள் இருதரப்பு வர்த்தகம் மற்றும் வலுவான பொருளாதார உறவுகளை அதிகரிக்குமென நான் நம்புகிறேன்” அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.