🛑 Breaking News : நீதி அமைச்சராக பதவியேற்றார் அலி சப்ரி
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் இன்று (12) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருப்பதாக விஜயதாச ராஜபக்ச அறிவித்திருந்த நிலையில் தனது நீதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.