தேர்தல் கண்காணிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கு அனுமதி !
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு, அந்த செய்திகளை முற்றாக நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் சரியான தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக் குழுவுடன் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ளுமாறும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.