🛑 Breaking News : தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றம்

🛑 Breaking News : தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று (12) நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் சம்பள அதிகரிப்பிற்கு ஆதரவாக 14 பேரும், எதிராக 3 பெருந்தோட்ட நிறுவனங்களும் வாக்களித்துள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1,700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

1,700 ரூபாய் சம்பளம் கிடைக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )