
சுயாதீனமாக செயற்படப்போவதாக அருந்திக்க பெர்னாண்டோ அறிவிப்பு
சுயாதீன பாராளுமன்ற உறுப்பினராக இன்று (04) முதல் செயற்படப்போவதாக அருந்திக்க பெர்னாண்டோ சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும் இரண்டு பிரதான கட்சிகள் இணைவதே இன்றைய தேவையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அருந்திக்க பெர்னானண்டோ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.