தேசிய மக்கள் சக்திக்கு வாசுதேவ நாணயக்கார ஆதரவு

தேசிய மக்கள் சக்திக்கு வாசுதேவ நாணயக்கார ஆதரவு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஆதரவை வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

தேசியப் பட்டியலில் இருந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “எத்தகைய உடன்பாடு ஏற்பட்டாலும் கட்சி ரீதியாக வருவோம், எதிர்ப்புகள் வந்தாலும் சரியானதைச் செய்வோம் என்பதே எமது நிலைப்பாடு. தேசிய மக்கள் சக்தி அரசை பாதுகாப்பதே சரியானது. எனது உயிர் உள்ளவரை நான் எனது கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்குவேன்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)