
இதுவரை 33 குழுக்கள் வேட்பு மனுக்கள் தாக்கல்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் 246 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன், 33 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது
செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், இதுவரை 246 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
