
காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் பலி
கலென்பிந்துனுவெவ- மஹசென்கம பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று முன்தினம் (29) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
69 வயதுடைய மஹசென்கம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka