
கல்வியமைச்சு முன்பாக போராட்டம் ; 3 பேர் கைது
இசுறுபாய முன்பாக ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நிரந்தர நியமனம் வழங்கக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாகவே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கலைக்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சில பொலிஸ் உத்தியோகர்கள் காயமடைந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.