மின்சார சபை ஊழியர்களுக்கு இவ்வருடம் Bonus இல்லை

மின்சார சபை ஊழியர்களுக்கு இவ்வருடம் Bonus இல்லை

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு (போனஸ்) வழங்குமாறு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கவில்லை என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை இவ்வருடம் பாரிய இலாபத்தை ஈட்டிய போதிலும், கடன் மீளச் செலுத்துவதற்கும் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கும் இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு (போனஸ்) வழங்க முடியாது என இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க உறுதிப்படுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)