
உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மீகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்சோபுர பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீகஸ்வெவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (13) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதுடைய மஹதலாகொல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
TAGS Sri lanka