
வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஒருவர் கைது
கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் சட்டவிரோத வலி நிவாரணி மாத்திரைகளை கொண்டுச் சென்ற நபரொருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோத வலி நிவாரணி மாத்திரைகளின் மொத்த பெறுமதி 1 பில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்தியாவிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 500,000 வலி நிவாரணி மாத்திரைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த மாத்திரைகள் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
CATEGORIES Sri Lanka