
பொலிவியாவில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி 37 பேர் பலி
பொலிவியா நாட்டின் மேற்கு போடோசி பிராந்தியத்தில் உள்ள உயுனி-கோல்சானி நகரங்களுக்கு இடையே நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர் திசையில் பாய்ந்தது. இதில் மற்றொரு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 2 பஸ்களும் கவிழ்ந்து நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
CATEGORIES World News