I’m Game படத்தின் போஸ்டர் வெளியீடு

I’m Game படத்தின் போஸ்டர் வெளியீடு

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு பிறகு துல்கர் சல்மான தற்பொழுது I’m Game என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நஹஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார்.

கிங் ஆஃப் கொதா திரைப்படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் மலையாள திரைப்படமாகும். நஹஸ் இதற்கு முன் மலையாள வெற்றி திரைப்படமான RDX திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஒளிப்பதிவை ஜிம்ஷி காலித், இசையமைப்பை ஜேக்ஸ் பிஜாய், படத்தொகுப்பை சமன் சாக்கோ மேற்கொள்கின்றனர்.

இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் தயாரிக்கிறது. திரைப்படம் மலையாள மொழி தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்ண்டம் ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு கைகள் இடம் பெற்றுள்ளது. ஒருக்கையில் காயங்களுடன் கிரிக்கெட் பந்தை பிடித்துள்ளது. மற்றொரு கை எரியும் சீட்டை பிடித்துள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)