
போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருள் விற்பனை ; ஒருவர் கைது
மரதன்கடவல பகுதியில் இணையவழி மூலம் விற்பனைக்காக குளிர்பான போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரதன்கடவல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இணையவழி மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒரு தொகை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், சந்தேக நபரிடம் இருந்து 104 பொதிகளும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் விசாரணையில், சந்தேக நபர் தனது சட்டைக்குள் குளிர்பான போத்தல் மூடிகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 5.25 கிராம் எடையுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka