போப் பிரான்சிஸ் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு

போப் பிரான்சிஸ் உடல் நிலையில் மீண்டும் பின்னடைவு

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 14-ம் திகதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இடையில் அவரது உடல்நிலையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுவாசப் பாதையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

அவர் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போப் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)