
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்று (04) நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை, பல இடங்களில் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
CATEGORIES Sports News