அச்சுவேலி கைத்தொழில் பேட்டையினை  அமைச்சர் பார்வையிட்டார்

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையினை அமைச்சர் பார்வையிட்டார்

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையினை கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹிந்து நெத்தி இன்று (07) பார்வையிட்டார்.

கைத்தொழில் துறையை மேம்படுத்தும் நோக்கில் குறித்த இடத்திற்கு விஜய மேற்கொண்டார். இதன் போது அச்சுவேலியில் இயங்கி வரும் மரக்கறி எண்ணை உற்பத்தி செய்யும் நிலையத்தினை பார்வையிட்டு அதன் செயற்பாடுகள் தொடர்பில் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

IMG 20250307 WA0020

இதன் போது கடல்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரிய பெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், கோப்பாய் பிரதேச செயலர் சிவஸ்ரீ உள்ளடோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

 அனைத்து கைத்தொழில் நிலையங்களையும் மேம்படுத்தி அவற்றின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் குறித்த களப்பணி இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

IMG 20250307 WA0025
IMG 20250307 WA0025

 மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து அனைவரையும் உள்வாங்கி பாரிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கு தாம் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)