
கிரிபத்கொட பகுதியிலுள்ள இரவு விடுதியில் தாக்குதல் !
கிரிபத்கொட பகுதியில் உள்ள இரவு விடுதியின் மீது இன்று (08) அதிகாலை ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வாள்கள் மற்றும் பொல்லுகளை ஏந்திய 7 பேர் கொண்ட குழு ஒன்று இந்த விடுதியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களையும் உடைத்து, விடுதியிலுள்ள பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.