
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று !
ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் இறுதிப்போட்டி இன்று டுபாயில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
குறித்த போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் பங்களாதேஷ் , பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளை தோற்கடித்து அரை இறுதியில் அவுஸ்திரேலியா அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது.
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளை வீழ்த்திய நிலையில் இந்தியாவிடம் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.
தொடர்ந்து அரை இறுதியில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதற்குமுன்னர் இருமுறை கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணி இன்றைய போட்டியில் மூன்றாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கும்
அதேவேளையில் 2000ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றிய நியூசிலாந்து அணி இரண்டாவது முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்கும்
இந்த சூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.