
பட்டலந்தை அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை
பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலையடுத்து, பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை மீண்டும் பேசுபொருளானது. பட்டலந்தை சித்திரவதைக் கூடம் தொடர்பில் விசாரிப்பதற்கு 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கம், ஒரு முழுமையான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தது.
இந்த ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணை அறிக்கையே பட்டலந்தை அறிக்கை எனக் கூறப்படுகிறது. இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் தெரிவித்தார்