ரோயல் பார்க் கொலை சம்பவம் ; இழப்பீட்டை செலுத்தினார் மைத்திரி

ரோயல் பார்க் கொலை சம்பவம் ; இழப்பீட்டை செலுத்தினார் மைத்திரி

ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழங்க உத்தரவிடப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்திவிட்டதாக அவரது சட்டத்தரணி இன்று (11) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இன்று (11) காலை மைத்திரிபால சிறிசேனவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 

அதன்படி, ஏப்ரல் 29 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மைத்திரிபால சிறிசேன சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தனது கட்சிக்காரர் உரிய இழப்பீட்டை செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பின்னர் இந்த விவகாரம் குறித்து ஒரு பிரேரணை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டத்தரணிக்கு  நீதிபதிகள் குழு அறிவித்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)