
வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்கான விசேட செயல்பாட்டு அறை அறிமுகம்
மார்ச் 15 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் காலை 8.05 மணி வரை நாடு பூராகசவும் நடைபெறவுள்ள வனவிலங்கு கணக்கெடுப்பை மிகவும் துல்லியமாகவும் திறமையாகவும் நடத்தும் நோக்கில் கமத்தொழில் அமைச்சின் வளாகத்தில் ஒரு செயல்பாட்டு அறை நிறுவப்பட்டுள்ளது.
கால்நடை கணக்கெடுப்பின் போது ஏற்படக்கூடிய ஏதேனும் சிக்கல்கள் குறித்து விசாரிக்க இந்த செயல்பாட்டு அறை நேற்று (11) முதல் 15 ஆம் திகதி வரை செயல்படும் என்று கமத்தொழில், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏதேனும் சிக்கல் இருப்பின், செயல்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணான 011-2034336 ஐ அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்று அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன விலங்குகளின் எண்ணிக்கையைக் குறிப்பதற்காக வழங்கப்பட்ட படிவம்; உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், என்றும் குறித்த கணக்கெடுப்பு காலத்தில்; வரும் விலங்குகளைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக பங்களிப்புடன் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்புக்கு, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் அனைத்து பொதுமக்களும் தமது ஆதரவை வழங்குமாறு அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.