
மன் – அல் -அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கையளிப்பு
மன்- அல் -அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு சி.எஸ்.சுலைமான் பௌண்டேசன் அமைப்பினால் 8 இலட்சம் பெறுமதியான நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நேற்று (13) மாலை பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
மன்னார் உப்பு குளத்தைச் சேர்ந்த மர்ஹூம் ஷேக் சுலைமான் முகம்மது தௌபீக் அவர்களின் நினைவாக சி.எஸ்.சுலைமான் பௌண்டேசன் அமைப்பினால் குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கையளிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் திருமதி எஸ்.ஜே.பஸ்மி அவர்களிடம் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம். பரந்தாமன் அவர்களினால் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
இதன் போது பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஆர்.லெம்பேட்
CATEGORIES Sri Lanka