
பிரபல ரெப் இசை பாடகர் துப்பாக்கியுடன் கைது
ஷான் புத்தா எனப்படும் பிரபல ரெப் இசை பாடகர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகொடை அரலிய உயன பகுதியில் வைத்து 9 மில்லி மீட்டர் துப்பாக்கியுடன் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு துப்பாக்கி வழங்கியதாகக் கூறப்படும் மன்னார் பொலிஸ்நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் குறித்த பாடகரின் முகாமையாளரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் மாத்தறை, கொட்டவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது இந்த துப்பாக்கி திருடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka