வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை (மார்ச் 15) காலை 8.00 – 8.05 மணிக்கு நடைபெற உள்ளது.

அன்று உங்கள் தோட்டம், விவசாய நிலம், பாடசாலை, வழிபாட்டுத் தலம் அல்லது நிறுவனத்தில் இருக்கும் குரங்குகள், அணில்கள் மற்றும் மயில்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தில் பதிவு செய்து உங்கள் பிரதேச கிராம அலுவலர் அல்லது பொருளாதார மேம்பாட்டு அலுவலர் அல்லது சமுர்த்தி மேம்பாட்டு அலுவலர் அல்லது விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரிடம் கையளிக்குமாறு விவசாய, கால்நடை வளர்ப்பு, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)