சூரிய ஒவ்வாமையால் ஏற்படும் பாதிப்புகள்

சூரிய ஒவ்வாமையால் ஏற்படும் பாதிப்புகள்

சூரிய ஒவ்வாமை என்பது சூரிய ஒளியில் இருக்கும் அல்ட்ரா வயலட் என்ற புற ஊதா கதிர்வீச்சு காரணமாக தோலில் ஏற்படும் பாதிப்புகளை குறிக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் அதிக நேரம் நிற்கும்போது தோலில் ‘பாலிமார்பிக் லைட் டெர்மடோசிஸ்’ என்ற பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால், தோலில் திட்டுத்திட்டாக சிவத்தல், கொப்புளங்கள் மற்றும் பருக்கள் உருவாகலாம். இந்த பாதிப்புகளில் கடுமையான அரிப்பு காணப்படும். இது பொதுவாக கழுத்து, மேல் மார்பு, மேல் கைகள், கைகளின் பின்புறம் அல்லது தொடைகளை பாதிக்கிறது. இது வெயில் காரணமாக ஏற்படும் பரவலான ஒரு பாதிப்பு.

ஆனால், சுட்டெரிக்கும் வெயிலின் புற ஊதா கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் மெலனோமா என்பது மிகவும் ஆபத்தான தோல் புற்றுநோய் ஆகும். புற ஊதா கதிர்வீச்சு காரணமாக தோலில் வீரியம் மிக்க கட்டியாக இது ஏற்படுகிறது. இந்த தோல் புற்றுநோய் என்பது உடலில் புதிய மச்சமாக அல்லது பழைய புள்ளிகளில், மச்சங்களில் ஏற்படும் நிறம், வடிவம், அளவில் ஏற்படும் மாற்றங்களாகக்கூட இதன் அறிகுறிகள் தென்படும்.

பொதுவாக, இந்த மெலனோமாக்கள் என்பது ஒழுங்கற்ற திட்டு, நிறத்தை கொண்டிருக்கும். அரிப்பு என்பது பொதுவான அறிகுறியாகும்.

வெயில் காலத்தில் தோலில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்பத்தில் கண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளாத நிலையில் உயிருக்குக்கூட ஆபத்தான நிலை ஏற்படும் என்கின்றனர்.

குறிப்பாக, தோல் புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். இந்நோய் கடுமையான வெயில் காரணமாக ஏற்படுகிறது என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளதாக இத்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)