
முன்னாள் பொலிஸ் மா அதிபரைக் கூட கைது செய்ய முடியாமல் போயிருக்கிறது
ஓய்வு பெற்ற பிறகும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுகின்றன. இது இவ்வாறு தொடர்ந்தால் இவர்கள் எவ்வாறு தமது அரச பணியை முன்னெடுப்பது.
இங்கு பிரச்சினை காணப்படுகின்றது. இந்த கொலை செய்யும் கலாச்சாரத்தை நிறுத்த தேசிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதற்கு எதிர்க்கட்சியினர் ஒட்டுமொத்த ஆதரவையும் நல்குவர். முன்னாள் பொலிஸ் மா அதிபரை கண்டுபிடிக்க முடியாவிட்டால் சட்டத்தின் ஆட்சியை எவ்வாறு கோலோச்சுவது? எனவே இதனை வேடிக்கையாக எடுத்துக் கொள்ளாமல் தீர்வுகளை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
நாட்டின் தேசிய பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க சபை அமர்வுகள் ஆரம்பிக்கும் நேரத்தில், பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவருக்கு இருந்த வாய்ப்பை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
ஆகையால் தான் வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்திக்கு மத்தியில் இவ்வாறு இந்த விடயத்தை சபையில் முன்வைக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.