நில்வளா நதி சுத்திகரிப்புத் திட்டம் அக்குரஸ்ஸவில் ஆரம்பம்

நில்வளா நதி சுத்திகரிப்புத் திட்டம் அக்குரஸ்ஸவில் ஆரம்பம்

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நில்வளா நதியை சுத்தப்படுத்தும் “SAVE NILWALA” திட்டம், மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையில் நேற்று (13) அக்குரஸ்ஸ பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

மனித நடவடிக்கைகளால் மாசுபட்டு வரும் நில்வளா நதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்து, குடிநீரின் தரத்தை உயர்த்துவது மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன உட்பட அரச அதிகாரிகள், சேவ் நில்வளா அமைப்பு மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)