இப்போதாவது சரியான விஞ்ஞானபூர்வ தரவுகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை கையாளுங்கள்

இப்போதாவது சரியான விஞ்ஞானபூர்வ தரவுகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை கையாளுங்கள்

2025 ஜனவரி இல் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் பிரகாரம், ஒரு நபர் ஒரு மாதம் வாழ்வதற்கு 16334 ரூபா தேவை என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தீர்மானத்திற்கு வந்துள்ளது.

4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மாதம் 65336 ரூபா தேவைப்படுகிறது. இதன் மூலம் வாழ முடியுமா என கேள்வி எழுப்புகிறேன்.

உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகள் காணப்படுகின்றன. பொருட்களின் தற்போதைய விலையில் இந்த இலக்கை அடைய முடியுமா என்பதில் பிரச்சினை காணப்படுகின்றன.

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பாக்கெட் ரூ.50 ஆல் அதிகரித்து வரும் வேளையில், 4 பேர் கொண்ட குடும்பத்தின் உணவுக்குத் தேவைகளுக்கு ரூ. 65336 போதுமா ? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு கேள்வி எழுப்பினார்.

இதை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். வறுமைக் கோட்டை மதிப்பிடும் முறைமையில் பல பிழைகள் காணப்படுகின்றன.

இது குறித்து ஆராய்ந்து, தரவு மையக் கொள்கைகளை வகுக்க வேண்டும். தவறான தரவுகளின் அடிப்படையில் அரசாங்கக் கொள்கைகள் வகுக்கப்பட்டால், சகலதுமே சீர்குலையும்.

முன்னைய அரசாங்கமும் இது போன்ற விஞ்ஞான பூர்வ தரவுகளின் அடிப்படையில் அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்காமையினால் தோல்வி கண்டதொரு திட்டமாக அது இன்று மாறியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)